Theme Check

இனி, 18 வயது மேஜர் கிடையாது: திருமணம் செய்ய முடியாது..!

இனி, 18 வயது மேஜர் கிடையாது: திருமணம் செய்ய முடியாது..!

இனி, 18 வயது மேஜர் கிடையாது: திருமணம் செய்ய முடியாது..!
X

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020-ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது, பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஆண்களுக்கு நிகராக 18லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்தை அறிவித்தார். ஓராண்டிற்கு பிறகு புதன்கிழமை அத்திட்டத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியது.

அமைச்சரவை ஒப்புதலை அடுத்து, குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006-ல் அரசு புதிய திருத்ததை அறிமுகப்படுத்தும் என்றும், அதே போன்று சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டம் போன்ற தனி நபர் திருமணச் சட்டம் 1955 ஆகியவற்றிலும் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் பிரசவகால இறப்பு விகிதத்தைக் குறைக்கும் நோக்கில் பெண்ணின் சட்டப்படியான மண வயதை பதினெட்டில் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Next Story
Share it