Theme Check

இனி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்! அதிரடி அறிவிப்பு!!

இனி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்! அதிரடி அறிவிப்பு!!

இனி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்! அதிரடி அறிவிப்பு!!
X

பொதுமக்கள் இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை தொடங்க ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தரமான பொருட்கள் பயனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே வந்து தரப்படும்.

மக்கள் யாரும் இதற்காக வீட்டை விட்டு வெளியே வரவோ, வரிசையில் நிற்கவோ அவசியம் இல்லை. அதிகாரிகள் பயனாளிகளுக்கு போன் செய்து அவர்களுக்கு எப்போது தேவையோ அப்போது வீட்டிற்கே வந்து ரேஷன் பொருட்களை வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.

pb cm

பஞ்சாப் அரசின் இந்த திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவோம் என்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் விரைவில் அமலாகும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இந்த திட்டத்தை டெல்லியில் செயல்படுத்துவதற்கு நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டோம். ஆனால் மத்தியில் இருக்கும் பாஜக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

newstm.in

Next Story
Share it