இனி வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை.. அமலானது புதிய கட்டுப்பாடு !!
இனி வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை.. அமலானது புதிய கட்டுப்பாடு !!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பக்தர்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான தடை இன்று முதல் அமலாகிறது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் திரிபு பரவல் தமிழகத்தில் வேகமெடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு இரவு நேர ஊரடங்கை அமல் செய்வதாக அறிவித்திருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி நேற்றிரவு முதன்முறையாக இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மாநிலம் முழுவதும் காவலர்கள் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டனர்.

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதனை மீறி சாலைகளில் சுற்றிவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். முதல் நாள் என்பதால் எச்சரித்து அனுப்பியதாகவும் இனி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி வெள்ளிக்கிழமையான இன்று, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை உள்ளது. நாளையும், நாளை மறுதினமும் இந்தக் கட்டுப்பாடு தொடரும். வாரத்தில் மற்ற 4 தினங்களாக திங்கள் முதல் வியாழன் வரை, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி உள்ளது.
newstm.in

