Theme Check

இனி, தகவல் தொழில்நுட்பவியல் துறை இல்லை.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!

இனி, தகவல் தொழில்நுட்பவியல் துறை இல்லை.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!

இனி, தகவல் தொழில்நுட்பவியல் துறை இல்லை.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!
X

தமிழக சட்டப்பேரவையில் 2022 - 2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘மாநிலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடனும் தகவல் தொழில்நுட்பவியல் துறை 1998-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறைகளின் வளர்ச்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். எனவே, ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு முன் முயற்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த கொள்கை வழி அணுகுமுறை தேவைப்படுகிறது.

முதல் கட்டமாக, வளர்ந்து வரும் தொழில்நுட்ப பிரிவுக்கு தலைமை தாங்கும் வகையில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி, தகவல் தொழில்நுட்பவியல் துறையில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலைத் தொழில் நுட்பங்களில் தொடக்கநிலை நிறுவனங்கள் மூலம் புதுமைகளை உருவாக்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ITNT Hub) ஒன்று சென்னையில் அரசால் நிறுவப்பட்டு வருகிறது.

எனவே, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் வளர்ச்சியை வலுப்படுத்த இத்துறை ‘தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை’ என மறுபெயரிடப்பட்டு அழைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it