Theme Check

இனி, கூட்டமான இடங்களில் நடமாடும் அம்மா உணவகம்!! எடப்பாடி அரசின்  அதிரடி திட்டம்!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் திட்டம் இந்தியா முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டது. இந்த திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் கூட முயற்சித்தார்கள். ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அம்மா உணவகங்கள் களையிழந்து போனது. அம்மா உணவகம் மூலம் மீண்டும் வருவாயைப்

இனி, கூட்டமான இடங்களில் நடமாடும் அம்மா உணவகம்!! எடப்பாடி அரசின்  அதிரடி திட்டம்!!
X

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் திட்டம் இந்தியா முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டது. இந்த திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் கூட முயற்சித்தார்கள். ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அம்மா உணவகங்கள் களையிழந்து போனது. அம்மா உணவகம் மூலம் மீண்டும் வருவாயைப் பெருக்கும் வகையில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் நடமாடும் அம்மா உணவகம் என்னும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

இனி, கூட்டமான இடங்களில் நடமாடும் அம்மா உணவகம்!! எடப்பாடி அரசின்  அதிரடி திட்டம்!!

தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் மற்றும் கண் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.அம்மா உணவகத்தில் காலை, மதியம், இரவு 3 வேளையும் மலிவான விலையில் உணவு பொருட்கள் கிடைத்தபோதும் கூட்டம் குறையத் தொடங்கியது.அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு கூட ஒரு சில அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில் அம்மா உணவகத்தை மேம்படுத்தி மேலும் சிறப்பாக செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. விற்பனையை அதிகரித்து வருவாயை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இனி, கூட்டமான இடங்களில் நடமாடும் அம்மா உணவகம்!! எடப்பாடி அரசின்  அதிரடி திட்டம்!!

அதன் அடிப்படையில் நடமாடும் அம்மா உணவகம் என்னும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக முதலில் 3 வேன்கள் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளன. அந்த வேனில் உணவு பண்டங்களை வைத்து விற்பனை செய்ய வசதியாக மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.முதல் கட்டமாக 3 மண்டலங்களில் இந்த நடமாடும் அம்மா உணவக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த திட்டத்தை ஆளும் அரசு பார்க்கிறது.

newstm.in

Tags:
Next Story
Share it