இனி தண்ணீர் பாட்டில் ரூ. 13 க்கு மேல் விற்க தடை !!
கேரளாவில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ. 13 என விலை நிர்ணயம் செய்து அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.20 என்று விற்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.மேலும் குடிநீர் பாட்டில் அத்தியாவசிய விற்பனை சட்டத்தின் கீழ் சேர்த்துள்ளது கேரள அரசு.

கேரளாவில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு நிறுவனம் ஒவ்வொரு விலையாக விற்பனை செய்து வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.எனவே பாட்டில் குடிநீரின் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கேரள அரசுக்கு கோரிக்கைகள் சென்றது.இந்நிலையில், கேரளாவில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ. 13 என விலை நிர்ணயம் செய்து அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.20 என்று விற்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.மேலும் குடிநீர் பாட்டில் அத்தியாவசிய விற்பனை சட்டத்தின் கீழ் சேர்த்துள்ளது கேரள அரசு.

இந்த விலை குறைப்பு நடவடிக்கைமூலம் அங்கீகாரம் பெறாத உற்பத்தியாளர்கள் கணிசமாக குறைவார்கள் என்று நம்பப்படுகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் பாட்டிலின் விலையை 2012 முதல் ரூ. 20 என உயர்த்தியதை தொடர்ந்து அனைத்து உற்பத்தியாளர்களும் விலையை உயர்த்திய நிலையில், தற்போது கொண்டுவந்திருக்கும் விலை நிர்ணய அறிவிப்பு, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தரம் குறைவான குடிதண்ணீரை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டுமே தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. 13 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாட்டில் என்பது கேரள மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.ஏற்கனவே, கேரளாவில் அரசு உற்பத்தி செய்யும் தண்ணீர் பாட்டில் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 10 என விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது
newstm.in

