இனி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கிடையாது !!
இனி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கிடையாது !!

பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத் துறை சார்பான எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் இனி பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாது மற்றும் பயன்படுத்தப்படாது என பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பஹவந்த் மான் முதல்வராக உள்ளார். அங்கு அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.
இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத் துறை சார்பான எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் இனி பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாது மற்றும் பயன்படுத்தப்படாது என பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பொது சுகாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த முடிவு பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத் துறை கீழ் வரக்கூடிய அத்தனை துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
Newstm.in
Tags:
Next Story

