Theme Check

இனி ஏடிஎம் கார்டே தேவையில்லை.. ஈசியா பணம் எடுக்கலாம் !!

இனி ஏடிஎம் கார்டே தேவையில்லை.. ஈசியா பணம் எடுக்கலாம் !!

இனி ஏடிஎம் கார்டே தேவையில்லை.. ஈசியா பணம் எடுக்கலாம் !!
X

இப்போது செல்போனை அதிகம் பயன்படுத்தி பணம் பறிமாற்றம் செய்வதால் ஏடிஎம் கார்டு பயன்பாடு குறைந்துவிட்டது. ஆனாலும், கைகளில் பணம் எடுக்கவேண்டும் என்றால் ஏடிஎம் தான் செல்ல வேண்டும். அவசரமாக செல்லும்போது கார்டு இருக்காது. இதனால் ஏற்படும் கோபம், மனஉளைச்சலுக்கு அளவே இல்லை.

ஆனால், தற்போது புதிதாக ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதி உள்ளது. இந்த வசதி ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால், அனைத்து வங்கிகளிலும் - ஏடிஎம்களிலும் இல்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது. இந்நிலையில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி கொண்டுவரப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

upi

-ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதில் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று QR code மூலமாக எடுப்பது. மற்றொன்று UPI ஆப் மூலமாக.

ஏடிஎம் மெஷினில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு மொபைல் நம்பர் போன்ற விவரங்களைப் பதிவிட்டவுடன் மெஷினில் QR code உருவாக்கப்படும். அதை நீங்கள் பயன்படுத்தும் UPI ஆப் மூலமாக ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம்.

இரண்டாவது வசதியில், உங்களுடைய UPI ஐடி மற்றும் தொகையை மெஷினில் பதிவிட்டு மொபைல் மூலமாக பணம் அனுப்பி அதை எடுக்கலாம்.

upi

இதுபோன்ற வசதிகளால் இனி ஏடிஎம் கார்டே இனி தேவைப்படாது. ஷாப்பிங் செய்வது, பெட்ரோல் போடுவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஸ்மார்ட்போனை வைத்தே வேலையை முடித்துவிடலாம். பணம் எடுப்பதற்கு மட்டுமே ஏடிஎம் கார்டு பயன்படுத்துகிறோம். இனி அதற்கும் தேவைப்படாது.

newstm.in

Next Story
Share it