Theme Check

முகக்கவசம் அணியத் தேவையில்லை.. பிரதமர் அதிரடி அறிவிப்பு..!

முகக்கவசம் அணியத் தேவையில்லை.. பிரதமர் அதிரடி அறிவிப்பு..!

முகக்கவசம் அணியத் தேவையில்லை.. பிரதமர் அதிரடி அறிவிப்பு..!
X

அடுத்த வாரம் முதல் முகக்கவசம் அணியவோ அல்லது வீட்டில் இருந்து வேலை செய்யவோ தேவையில்லை என இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாவது; “பொதுமக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது தற்போதைக்கு தொடரும். வரும் மார்ச் மாதம் காலாவதியாகும் இச்சட்டம் விரைவில் நீக்கப்படும்.
British PM Boris Johnson: Sixth child at the age of 57... ?
கூடுதல் தடுப்பூசி தொடர்பான அசாதாரண பரப்புரையினால் ‘பிளான் பி’ விதிமுறைகளை பொதுமக்கள் நல்ல முறையில் பின்பற்றியதால், மீண்டும் ‘பிளான் ஏ’ விதிமுறைகளுக்கு திரும்பலாம். ‘பிளான் பி’ விதிமுறைகள் அடுத்த வாரம் காலாவதியாகும்.

எனவே, அடுத்த வாரம் முதல் பொதுமக்கள் முகக்கவசம் அணியவோ அல்லது வீட்டில் இருந்து வேலை செய்யவோ தேவையில்லை. கொரோனா சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என்ற நடைமுறை முடிவுக்கு வரும். இருப்பினும், வணிக நிறுவனங்கள் விரும்பினால் கொரோனா பாஸ்களை தொடரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஒமைக்ரான் அலை உச்சத்தை எட்டி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறிவரும் நிலையில், போரிஸ் ஜான்சன் கட்டுப்பாடுகளை தளர்த்தி இருப்பது அந்நாட்டு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
Share it