Theme Check

திமுகவின் வெற்றியை யாரும் தடுக்கமுடியாது - அமைச்சர் மனோ தங்கராஜ்..!!

திமுகவின் வெற்றியை யாரும் தடுக்கமுடியாது - அமைச்சர் மனோ தங்கராஜ்..!!

திமுகவின் வெற்றியை யாரும் தடுக்கமுடியாது - அமைச்சர் மனோ தங்கராஜ்..!!
X

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் அமைச்சர் மனோதங்கராஜ் தேர்தல் பிரசாரம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

“நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி மிக பிரகாசமாக உள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும் 600 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து நலத்திட்டங்கள் செய்துள்ளோம். இதேபோன்று வளர்ச்சி பணிகள் தொடரும் என மக்கள் நம்புகின்றனர். அதனால்தான் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளன.

பொன். ராதாகிருஷ்ணன் நினைப்பது போன்று எப்போதும் நடக்காது. திமுகவில் உள்ள சில பிரச்னைகளை அவர்கள் சாதமாக மாற்ற முயல்கிறார்கள். ஆனால் இந்தமுறையும் திமுகவுக்கு ஆதரவு அலை வீசுகிறது. எனவே குமரியில் அவர்கள் முயற்சி பலனளிக்காது.

பாஜக கள்ள பணம் போன்றது. பளபளப்பாக இருக்கும். ஆனால் அது சந்தைக்கும் ஆகாது; கையில் யார் வைத்திருந்தாலும் ஆபத்து. பாஜக, அதிமுகவிற்கு மக்கள் ஓட்டு போடமாட்டார்கள். அவர்கள் தோல்வி பயத்தில் உளறி வருகின்றனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றியை யாரும் தடுக்கமுடியாது. மக்கள் விழிப்புடன் உள்ளனர்.” என்று கூறினார்.

Next Story
Share it