Theme Check

“எல்.முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை” : தேர்தல் ஆணையம்!!

“எல்.முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை” : தேர்தல் ஆணையம்!!

“எல்.முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை” : தேர்தல் ஆணையம்!!
X

மத்திய அமைச்சர் எல்.முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அண்ணாமலை தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள ஓட்டாக போடப்பட்டுவிட்டது.

annamalai 1

மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?” எனக் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கை வேறு யாரும் போடவில்லை. அவர் வந்து வாக்களிக்கலாம். அந்த வாக்குப்பதிவு மையத்தில் இரண்டு முருகன் பெயர் உள்ளது. அதில் ஒன்றுதான் பதிவாகியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it