பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஊதிய இழப்பீடு கிடையாது: அரசு அறிவிப்பு !!

பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஊதிய இழப்பீடு கிடையாது: அரசு அறிவிப்பு !!

பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஊதிய இழப்பீடு கிடையாது: அரசு அறிவிப்பு !!
X

பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையில், அவர்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. அதற்காக தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும் பலரும் தடுப்பூசி செலுத்த மறுப்பாக கூறப்படும் நிலையில், ஜெர்மனியில் அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது, கொரோனா தொற்று பாதித்த ஒருவருடன் தொடர்பிலிருந்ததால் அந்நபரும் தனிமைப்படுத்தப்படுவார். அப்போது தனிமைப்படுத்தப்படும் நபரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் நிலையில், அவர் பூஸ்டர் டோஸ் செலுத்தியிருந்தால் தனிமைப்படுத்தப்படும் காலத்திற்கான ஊதியம் வழங்கப்படும்.

corona

கடந்த ஆண்டு அக்டோபர் அல்லது அதற்கு முன் கொரோனா தடுப்பூசி பெற்று, இதுவரை பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொள்ளாதவர்கள் இந்த விதியால் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.

ஆனால், இன்னமும் முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள் அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களை இந்த உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட உள்ளனர். புதிய விதிகளின்படி, பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள் மற்றும் கடந்த மூன்று மாதங்களுக்குள் தங்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றவர்கள் ஆகியோர், கொரோனா தொற்றுடைய ஒருவருடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தால் அவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது.

corona

ஆனால், அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும். இத்தகையோர் தனிமைப்படுத்தப்படும் போது அவர்கள் இழந்த ஊதியத்துக்கு இழப்பீடு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in


Tags:
Next Story
Share it