வீட்டில் இடமில்லை.. மருத்துவமனையில் பெட் இல்லை.. கொரோனா பாதித்த இளைஞர் எடுத்த அதிரடி முடிவு !!
வீட்டில் இடமில்லை.. மருத்துவமனையில் பெட் இல்லை.. கொரோனா பாதித்த இளைஞர் எடுத்த அதிரடி முடிவு !!

தெலுங்கானாவின் நலகொண்டா அருகே கொத்தானிகுண்டா கிராமத்தில் சிவா (18) என்ற இளைஞர் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த வாரம், கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.

ஆனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால் தனிமைப்படுத்திக் கொள்ள அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை. மேலும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லாததாலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். எனினும் வீட்டில் ஒரு அறை மட்டும் கொண்ட சிறிய வீட்டில் குடும்பத்தினர் 4 பேர் வசிக்கும் நிலையில் இது சவாலானது. தன்னால் குடும்பத்தில் மற்றவர்களுக்கு கொரோனா பரவிவிடும் என அவர் அஞ்சினார்.

இந்த நிலையில் வீட்டுக்கு அருகேயுள்ள மரத்தின் மீதேறி, தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அதன்படி, மரத்தின் மீது கட்டில் கட்டி, சிவா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு தேவையான உணவு மற்றும் மருந்தை, கயிற்றின் மூலம் அவரது குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர். கடந்த 11 நாட்களாக அவர் இப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அவர், மரத்தில் கட்டில் கட்டித் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
newstm.in

