Theme Check

ரசிகர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை: ஹசன் அலியின் மனைவி விளக்கம் !!

ரசிகர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை: ஹசன் அலியின் மனைவி விளக்கம் !!

ரசிகர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை: ஹசன் அலியின் மனைவி விளக்கம் !!
X

உலக கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் தொடக்க போட்டியில் இருந்து அசத்தி வந்த பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. அரையிறுதி போட்டியில் 19ஆவது ஓவரில் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட்டின் கேட்சை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தவறவிட்டார்.

hassian ali

அதற்கு அடுத்த 3 பந்தில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து வேட் அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் ஹசன்அலி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் அணியின் கேப்டனும் அணியின் தோல்விக்கு கேட்ச் தவறவிட்டது ஒரு காரணம் என கூறினார். அவரின் குடும்பத்திற்கு ரசிகர்களிடம்இருந்து மிரட்டல்கள்வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

hassian ali

இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியின் மனைவி ஷமியா அர்ஸு, பாகிஸ்தான் ரசிகர்களிடம் இருந்து தனக்கோ, தனது கணவருக்கோ, மகளுக்கோ அச்சுறுத்தல்கள் வரவில்லை என தெரிவித்துள்ளார். சமுக வலைதளங்கள் வழியாக அச்சுறுத்தல் வந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என அவர் இஸ்டாகிராமில் மறுத்துள்ளார்.

ஷமியா அர்ஸு இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஜினியரான இவர் அமீரகத்தில் பணியாற்றியபோது ஹசன் அலியுடன் காதல் ஏற்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Tags:
Next Story
Share it