இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லை! பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!
இந்தியாவுடன் எந்த வர்த்தகம் இல்லை! பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுடன் வர்த்தகத்தில் நெடுங்காலமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சர்க்கரை, பருத்தி மற்றும் பருத்தி நூல் இறக்குமதி செய்ய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பாகிஸ்தான் அதிபர் விடுத்த செய்திக்குறிப்பில் தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தகத்தையும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்வதற்கான பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு முன்மொழிவை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியுறவு அமைச்சர் இதுகுறித்து தெரிவிக்கையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து முடிவை மீண்டும் க மாற்றியமைக்கும் வரை உறவுகளை இயல்பாக்க முடியாது என தெரிவித்துள்ளார். இறக்குமதிக்கான மாற்று வழிகளை கண்டுபிடிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளை மேம்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

