‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ கிடையாது! அமெரிக்கா அதிரடி!
‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ கிடையாது! அமெரிக்கா அதிரடி!

உலகம் முழுதும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து அரசுகளும் போராடி வருகின்றன. அதனால் இன்னமும் சர்வதேச விமான போக்குவரத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் தற்போது சர்வதேச அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் சில நாடுகளில் சர்வதேச பயணம் மேற்கொள்பவர்களுக்கு, தடுப்பூசி போட்டு கொண்ட விவரங்கள் அடங்கிய ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் இந்த திட்டத்தை மே மாதம் முதல் செயல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அமெரிக்க அரசு ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்காது என்று வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொது மக்களின் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதில் அமெரிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரை தனிநபர் தடுப்பூசி போட்டுக்கொண்ட தகவல்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் தடுப்பூசி விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச பயணிகளுக்கு ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்கும் திட்டம் எதுவும் இல்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

