Theme Check

தலை நிமிரும் காம்ரேட்கள்! தமிழகத்தை பின்னுக்குத் தள்ளியது கேரளா!

தலை நிமிரும் காம்ரேட்கள்! தமிழகத்தை பின்னுக்குத் தள்ளியது கேரளா!

தலை நிமிரும் காம்ரேட்கள்! தமிழகத்தை பின்னுக்குத் தள்ளியது கேரளா!
X

கொரோனா காலத்துல உலகமே உயிர் பயத்தில் இருந்த காலத்தில், பல நாடுகளில் மக்கள் தொகை கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது என்கின்றன புள்ளி விவரங்கள்.

இந்தியாவில் தற்போது பல மாநிலங்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் கொரோனாவிற்கு பிறகு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், இந்தியாவிலேயே தற்போது கேரள மாநிலத்தில் தான் முதியவர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் பங்கு 16.5 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

முதியோர் உதவித்தொகை உயர்வு!

இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு, முதியவர்களின் அளவு 13.6 சதவீதமாக இருக்கும் நிலையில் இதற்கடுத்த இடங்களில் இமாச்சல் பிரதேசத்தில் 13.1 சதவீதம், பஞ்சாப்பில் 12.6, ஆந்திராவில் 12.4 சதவீதத்துடன் உள்ளன. இதே போல், நாட்டிலேயே முதியவர்கள் மிகக் குறைவாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது.

elder 1

அங்குள்ள மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை 7.7 சதவீதமாக இருக்கிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உத்தரப் பிரதேசம் – 8.1, அசாம் – 8.2 ஆக இருக்கின்றன. 2031ல் அதிக பட்சமாக கேரளாவில் 20.9 சதவீத முதியவர்கள் இருப்பார்கள் எனவும், தமிழகத்தில் 18.2, இமாச்சலில் 17.1, ஆந்திராவில் 16.4, பஞ்சாபில் 16.2 என்ற வீதத்தில் முதியவர்களின் எண்ணிக்கை இருக்கும்’ எனவும் அந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, அந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, போதிய மருத்துவ வசதிகள் மற்றும் ஆரோக்கியமான சூழல் இருப்பதற்கான அறிகுறிகள் என்கின்றன ஆய்வறிக்கை முடிவுகள்.

Tags:
Next Story
Share it