சைனீஸ் காளி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் நூடுல்ஸ்.. இதற்கான வரலாற்று காரணம் !!
சைனீஸ் காளி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் நூடுல்ஸ்.. இதற்கான வரலாற்று காரணம் !!

இந்தியாவில் இந்துக்கள் தான் பெரும்பான்மையானவர்கள். இந்து மதத்தில் பல விதமான கடவுள்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகளும் உள்ளது. ஆனால் பொதுவாக கடவுளை வழங்குபவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது அனைத்து கோவில்களிலும் பொதுவான விஷயம்.
நாம் உதாரணமாக கூற வேண்டும் என்றால் திருப்பத ஏழுமலையான் கோவிலில் லட்டு, பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் என குறிப்பிட்டு சொல்லலாம். இவ்வாறு ஒவ்வொரு கோவில்களிலும் பிரசாதங்கள் தனி ஸ்பெஷல் தான்.

அந்த வகையில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு காளி கோவிலில் வித்தியாசமான பிரசாதம் ஒன்று வழங்கப்படுகிறது. அந்த கோவிலில் நூடுல்ஸ் மற்றும் சாப்ஸ்டிக் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உணவு சீன வகை உருவாகும்.
அந்த காளியின் பெயர் சைனீஸ் காளி, கொல்கத்தாவின் பிரபலமான தாங்கரா டவுண் பகுதியில் இந்த கோவில் உள்ளது. இந்த பகுதியை சீனா டவுண் என்றும் மக்கள் அழைப்பார்கள். இந்த கோவிலில் உள்ள காளி மற்ற காளி கோவில் காளி போலவே தான் இருக்கும். இந்த காளிக்கு இந்த நூடுல்ஸ் தான் பிரசாதமாக படைக்கப்படும். பின்னர் அது பக்தர்களுக்க விநியோகம் செய்யப்படும். இது மட்டுமல்ல பல சீன பாரம்பரிய உணவுகளும் காளிக்கு படைக்கப்படும்.

இந்த கோவில் 80 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. முதல் 20 ஆண்டுகள் வெறும் மரத்தடியில் உள்ள கற்களை தான் காளியாக மக்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் மேற்கு வங்க மக்களும், சீனர்களும் இணைந்து இந்த காளி கோவிலை கட்டினர். அதனால் தான் இந்த காளி சைனீஸ் காளியாக வழிபடபடுகிறார்.
newstm.in

