வடகொரியாவில் 11 நாட்களுக்கு மக்கள் சிரிக்கவும், மது அருந்தவும் தடை.. அதிபர் உத்தரவு !!
வடகொரியாவில் 11 நாட்களுக்கு மக்கள் சிரிக்கவும், மது அருந்தவும் தடை.. அதிபர் உத்தரவு !!

வட கொரியா நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜான் இல் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் அந்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது. இவர் வட கொரியாவை 1994 முதல் டிசம்பர் 17, 2011 அன்று இறக்கும் வரை ஆட்சி செய்தார். இவரது மறைவு தினத்தை தேசிய துக்கக் காலமாக கருதி, நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த துக்க நாட்களில் மக்கள் என்னென்ன செய்யக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது வெளியே தெரிந்து உலக நாடுகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த தேசிய துக்க நாட்களான 11 நாட்களும் வடகொரியா நாட்டு மக்கள், மது அருந்துவது, பிறந்தநாள் கொண்டாடுவது உள்ளிட்ட எந்த கொண்டாட்டத்திற்கும் அனுமதி இல்லை. அதாவது, தேசிய துக்கக் காலத்தில், மது அருந்தவோ, சிரிக்கவோ அல்லது ஓய்வுநேரங்களில் ஈடுபடவோ கூடாது. ஏன், மளிகைக் கடைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இதைவிட கொடுமை என்னவென்றால், துக்கக் காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர் இறந்தாலும், நீங்கள் சத்தமாக அழக்கூடாது, அது முடிந்ததும் தான் உடலை வீட்டில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. கடந்த காலங்களில் துக்க காலத்தில் மது அருந்திய அல்லது போதையில் பிடிபட்ட பலர் கைது செய்யப்பட்டு கருத்தியல் குற்றவாளிகளாக கருதப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் நிலைமை என்னவென்றே தெரியவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர்.
வடகொரியாவில் அண்மையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.