Theme Check

அமெரிக்காவை ஒரு பொருட்டாகவே கருதாத வடகொரியா.. மீண்டும் ஏவுகணை சோதனை !!

அமெரிக்காவை ஒரு பொருட்டாகவே கருதாத வடகொரியா.. மீண்டும் ஏவுகணை சோதனை !!

அமெரிக்காவை ஒரு பொருட்டாகவே கருதாத வடகொரியா.. மீண்டும் ஏவுகணை சோதனை !!
X

அணு ஆயுத வல்லமை கொண்ட நாடான வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலிலும் வடகொரியா தனது வழக்கமான அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதாவது தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லையென வடகொரிய அறிவித்துள்ளது. இதனால் அங்கு மக்கள் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் இதனை மறுத்து வருகிறது.

north korianorth koria

அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அதிர வைத்து வருகிறது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 3 முறை ஏவுகணை சோதனை நடத்தியது.

north koria

ந்த நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏவுகணை சீறிப்பாயும் காட்சிகளையும் அதில் வெளியிட்டுள்ளது. எனினும், தென்கொரியா இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை.

newstm.in

Tags:
Next Story
Share it