தமிழ்நாடு ஒன்றிய அரசு நிறுவனங்களில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம்!! அதிர்ச்சியில் மக்கள்!!
தமிழ்நாடு ஒன்றிய அரசு நிறுவனங்களில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம்!! அதிர்ச்சியில் மக்கள்!!

தமிழ்நாட்டில் படித்து பட்டம் வாங்கிய இளைஞர், மாநிலத்தில் இயங்கும் ஒன்றிய அரசு நிறுவனத்திலோ, ரயில்வே, என்எல்சி போன்ற நிறுவனங்களிலோ வேலையில் சேர முடிவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்கள் பிறமாநிலத்தவருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தவர்கள் அதிகளவில் ஒன்றிய அரசு வேலைவாய்ப்பில் இடம்பிடித்துள்ளார்கள்.
அஞ்சலக துறை 2016-ம் ஆண்டு நடத்திய தேர்வில் வடஇந்தியர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்கள். இவர்கள் தமிழ் பாடத்தில் 25-க்கு 24 மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களது தேர்ச்சி நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வடமாநிலத்தவர் மோசடி செய்து தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய ரசு நிறுவனங்களில் சேருவதாக பல ஆண்டுகளாக புகார்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு ஒன்றிய அரசு நிறுவனங்களில் 20-க்கும் மேற்பட வடமாநிலத்தவர் போலி ஆவணங்கள் மூலம் வேலையில் சேர்ந்து உள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு தேர்வுத்துறை வழங்கியது போல் போலி ஆவணம் கொடுத்து ஒன்றிய அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் வடமாநிலத்தவர்கள் சேர்ந்து உள்ளனர்.
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 200 பேர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து உள்ளனர். அஞ்சலக துறை, சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் போன்ற நிறுவனக்களில் இவ்வாறு நடந்து உள்ளது.
யுபிஎஸ்சி கொடுத்த சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் போலி சான்றிதழ்கள் என அரசு தேர்வுகள் துறை உறுதி செய்து உள்ளது. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க அரசு தேர்வுகள் துறை அஞ்சலக துறைக்கு பரிந்துரை செய்து உள்ளது.
போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்து உள்ளது.

