Theme Check

தொடங்கியதில் ஒன்று கூட உருப்படி இல்லை..! - மா.சுப்பிரமணியன்

தொடங்கியதில் ஒன்று கூட உருப்படி இல்லை..! - மா.சுப்பிரமணியன்

தொடங்கியதில் ஒன்று கூட உருப்படி இல்லை..! - மா.சுப்பிரமணியன்
X

“ஆட்சிப் பொறுப்பை திமுக ஏற்றிருக்கும் நிலையில், அம்மா மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. அத்திட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்கு தடை போடக்கூடாது” என்று, சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த ஆட்சியில் அம்மா கிளினிக் என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டபோதே அத்திட்டம் சரியாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று திமுக தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தது.ஆனால், அதை முறையாக நடைமுறைப் படுத்தினார்கள் என்பதற்கு ஒரு ஆதாரம் கூட இல்லை. அம்மா கிளினிக் என்று தமிழகம் முழுவதும் தொடங்கினார்கள். ஆனால் அதில் ஒன்று கூட உருப்படியாக இல்லை.

சில இடங்களில், கழிவறையை கூட சரி செய்து அதை அம்மா மினி கிளினிக் ஆக்கியிருக்கிறார்கள். நகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு சிறிய அறை இருந்தால் போதும். அதை அம்மா மினி கிளினிக் என்று அறிவித்தார்கள்.

ஆனால், அதிலும் கூட ஒரு மருத்துவர், செவிலியர் நியமிக்கவில்லை. இப்படி அலங்கோலமாக ஒரு திட்டத்தை செய்து விட்டு, அதைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார்” என்று காரசாரமாக பதிலளித்தார் சுப்பிரமணியன்.
Tags:
Next Story
Share it