அதில் அல்ல, இதில்தான் பிரதமர் மோடி நிபுணர்.. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சாடல்..!
அதில் அல்ல, இதில்தான் பிரதமர் மோடி நிபுணர்.. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சாடல்..!

அரசுத் துறைகள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்களில் உள்ள மனித வளம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்குப் பின்னர், “அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும். இதனை, ‘மிஷன் மோட்’ எனப்படும் வேக கதியில் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி இருக்கிறது. இதையொட்டி அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “எட்டு ஆண்டுக்கு முன்னர், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று இளைஞர்களுக்கு வாக்குறுதி வழங்கி ஏமாற்றினார்கள்.
அதேபோன்றுதான் இப்போது 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்கிறார்கள். இது வெற்று வாக்குறுதி அல்ல; மாபெரும் வெற்று வாக்குறுதி. பிரதமர், வேலைகளை உருவாக்குவதில் நிபுணர் அல்ல; வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை உருவாக்குவதில் நிபுணர்” எனப் பதிவிட்டுள்ளார்.

