ரிசர்வ் வங்கியை துவங்குகிறார் நித்தியானந்தா! செம தில் வீடியோ இணைப்பு!

ரிசர்வ் வங்கியை துவங்குகிறார் நித்தியானந்தா! செம தில் வீடியோ இணைப்பு!

ரிசர்வ் வங்கியை துவங்குகிறார் நித்தியானந்தா! செம தில் வீடியோ இணைப்பு!
X

தமிழகம் உள்பட இந்தியாவே கொரோனா தொற்றால் அல்லல்பட்டுகொண்டிருக்கிறது. ஆனால் எங்கே இருக்கிறார் என தெரியாத நித்தியானந்தா கைலாசா நாடு குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

தனி நாடு, தனி கொள்கை, தனி நாணயம், தனி வங்கி என அறிவிப்பு வெளிட்டால் நம்ப முடிகிறதா? வேறு வழியில்லை நம்பித்தான் ஆகனும். 

வழக்கம்போல் கிராபிக்ஸ் கலந்த காணொலியில் உரையாற்றிய நித்தியானந்தா, இரண்டரை மணி நேர விடியோவின் 1.15-வது நிமிடத்தில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

அதில், இந்த விநாயகர் சதுர்த்தி நாளில், கைலாசத்துடைய நாணயங்கள் - காசு முறைப்படியாக வெளியிடப்படும். விநாயகப் பெருமானின் பேரருளால் பரம்பொருள் பரமசிவனின் பேரருளால் விநாயகர் சதுர்த்தி மிக நல்ல நாள் என்பதால் அன்று அவை வெளியிடப்படும். ஏற்பாடுகள் அனைத்தும் நல்லபடியாக நிகழ்ந்துவிட்டன.

எந்த நாடு கைலாசத்தினுடைய ரிசர்வ் வங்கியை கையாள்கிறதோ அந்த நாட்டுக்கும் கைலாசத்துக்கு அதாவது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் மற்றும் தூதரக ரீதியிலான புரிந்துணர்வும், சட்ட உடன்படிக்கையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

ஏறத்தாழ 100 புத்தகங்கள் இந்து மதத்திலே பொருளதாரதத்தை எப்படி நமது சாஸ்திரங்கள் அணுகுகின்றன, பொருளாதாரம் என்ற கருத்தை இந்து சாஸ்திரங்கள் எவ்வாறு எடுத்துரைக்கின்றன என்பதை ஆராய்ந்து 300 பக்க அளவில் கைலாயத்தின் பொருளாதாரக் கொள்கையை தயாரித்திருக்கிறோம் என்றும் நித்யானந்தா அறிவித்துள்ளார்.

பெங்களூரு ஆசிரமத்தில் இருந்தப்போது பெண் சீடர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. எனினும் அலட்டிக்கொள்ளாத நித்தியானந்தா, நாள்தோறும் வீடியோ வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியம் அடையச் செய்தார்.

ந்நிலையில் தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என பெயர் வைத்தார். நான் தான் பிரதமர் என தனக்கு தானே பிரகடனமும் செய்து கொண்டார். 

newstm.in


 
 

Tags:
Next Story
Share it