Theme Check

சி.பி.ஐ சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.. ப.சிதம்பரம் விளக்கம்

சி.பி.ஐ சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.. ப.சிதம்பரம் விளக்கம்

சி.பி.ஐ சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.. ப.சிதம்பரம் விளக்கம்
X

சி.பி.ஐ. சோதனை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சென்னையில் உள்ள எனது வீட்டிலும், டெல்லியில் உள்ள எனது அதிகாரபூர்வ இல்லத்திலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. என்னிடம் ஒரு முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ. காட்டியது. அதில், குற்றம் சாட்டப்பட்டவராக என் பெயர்இல்லை.

சி.பி.ஐ. குழு, பலமணி நேர ம் சோதனை செய்தபோதிலும், எதையும் கண்டுபிடிக்கவோ, கைப்பற்றவோ இல்லை. மேலும், சோதனை க்குசி.பி.ஐ. தேர்ந்தெடுத்த தருணம் சுவாரஸ்யமானது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது 250 சீனாகாரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில்தான் முறைகேடு அரங்கேறி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

fd

250 சீனாகாரர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். கார்த்தி சிதம்பரம் மீது புதிதாக வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தனது சொந்த வேலைகள் காரணமாக கார்த்தி சிதம்பரம் லண்டன் புறப்பட்டு சென்றிருந்தார். இந்த நிலையில்தான் அவர் மீது வழக்கு போடப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் அரங்கிலும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


newstm.in

Next Story
Share it