Theme Check

அதிரடி அறிவிப்பு! நாளை முதல் மாஸ்க் கட்டாயமல்ல!!

அதிரடி அறிவிப்பு! நாளை முதல் மாஸ்க் கட்டாயமல்ல!!

அதிரடி அறிவிப்பு! நாளை முதல் மாஸ்க் கட்டாயமல்ல!!
X

கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

2020இல் இந்தியாவில் பரவிய கொரோனாவைக் கட்டுப்படுத்த முக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை நீக்கி வருகின்றன. எனினும், முகக்கவசம் அணிவதை நீக்கவில்லை.

corona

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ள தளா்வில், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை முதல் முறையாக நீக்கியுள்ளது.

அம்மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஏப்ரல் 2 முதல் கட்டாய முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

எனினும், அவரவா் சொந்த விருப்பத்தின்பேரில் முக்கவசத்தை அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் டெல்லியிலும் முகக்கவசம் கட்டாயமல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

mask

மேற்கு வங்கத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்தார். ஆனாலும் முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தப்படுத்துவது ஆகியவை அடுத்த உத்தரவு வரும்வரை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it