இனி, 8 மணி நேரம்தான்.. பெண் போலீசாரின் பணி நேரம் குறைப்பு.. டிஜிபி உத்தரவு..!
இனி, 8 மணி நேரம்தான்.. பெண் போலீசாரின் பணி நேரம் குறைப்பு.. டிஜிபி உத்தரவு..!

பெண் காவலர்கள் 12 மணி நேரத்துக்குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று காவல்துறை இயக்குநர் ஜெனரல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து மகாராஷ்டிர மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) சஞ்சய் பாண்டே வெளியிட்டுள்ள உத்தரவில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது, ஆண் மற்றும் பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக உள்ளது.
இந்நிலையில், பெண் காவலர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் அவர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராமப்புறங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
அவசர காலத்திலும், பண்டிகை காலத்திலும் அவர்களுக்கான பணி நேரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது துணை காவல் ஆணையர்களின் அனுமதியுடன் அதிகரிக்கலாம்” என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

