இனி, இந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம்.. அரசின் அசத்தல் திட்டம்..!
இனி, இந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம்.. அரசின் அசத்தல் திட்டம்..!

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்பது அமைப்பு சாரா துறை தொழிலாளர்களுக்கான திட்டமாகும். இதன் கீழ், தெருவோர வியாபாரிகள், ரிக்ஷாக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறையுடன் தொடர்புடையவர்கள் பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசு உறுதி செய்கிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு வெறும் 2 ரூபாய் சேமிப்பதன் மூலம், நீங்கள் ஆண்டுக்கு 36,000 ரூபாய் ஓய்வூதியம் பெறலாம்.
இந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது, 18 வயதில் ஒரு நாளைக்கு சுமார் ரூ.2 சேமிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.36000 பென்ஷன் பெறலாம்.
ஒருவர் 40 வயதிலிருந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கினால், அவர் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்படி 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தொடங்குவீர்கள். 60 வருடங்கள் கழித்து மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள உங்களிடம் சேமிப்பு வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டை இருக்க வேண்டும். 18 வயதுக்கு குறைவாகவும், 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்காக அரசாங்கம் ஒரு இணையதள போர்ட்டலை உருவாக்கியுள்ளது. பொது சேவை மையத்தில் (CSC) உள்ள போர்ட்டலில் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த மையங்கள் மூலம் ஆன்லைனில் அனைத்து தகவல்களும் இந்திய அரசுக்குச் செல்லும்.
பதிவு செய்ய, உங்கள் ஆதார் அட்டை, சேமிப்பு அல்லது ஜன்தன் வங்கி கணக்கு பாஸ்புக், மொபைல் எண் தேவைப்படும். இது தவிர, சம்மதக் கடிதம் வழங்கப்பட வேண்டும்.
அது தொழிலாளி வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையிலும் கொடுக்கப்பட வேண்டும். இதனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஓய்வூதியத்திற்கான பணத்தை சரியான நேரத்தில் கழிக்க முடியும்.
இந்தத் திட்டத்திற்காக, தொழிலாளர் துறை அலுவலகம், எல்ஐசி, இபிஎஃப்ஓ ஆகியவை அரசாங்கத்தால் ஷ்ராமிக் வசதி மையமாக மாற்றப்பட்டுள்ளன. இங்கு செல்வதன் மூலம் இத்திட்டம் குறித்த தகவல்களை தொழிலாளர்கள் பெறலாம்.

