Theme Check

இனி, இந்த மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டில்.. அமைச்சர் மூர்த்தி அதிரடி..!

இனி, இந்த மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டில்.. அமைச்சர் மூர்த்தி அதிரடி..!

இனி, இந்த மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டில்.. அமைச்சர் மூர்த்தி அதிரடி..!
X

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி முகாமை தொடங்கி வைத்தார்.
பத்திரப் பதிவு அலுவலக செயல்பாடுகளில் மாற்றத்தைப் பார்ப்பீர்கள் - அமைச்சர் பி.  மூர்த்தி பேட்டி | Dinamalar
அதன் பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: “இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

கலப்பின மாடுகள் கொண்டு வருவோருக்கு டோக்கன் கொடுக்க மாட்டோம். திமுக ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டு முறையாக நடத்த அனுமதி பெற்று தரப்பட்டது. தற்போது, நாட்டு மாடுகளின் இனத்தை காப்பாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த கால ஆட்சியை போல் இல்லாமல் முறையாக ஜல்லிக்கட்டை நடத்துவோம். நாட்டு மாடு இனங்களை அபிவிருத்தி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என அவர் கூறினார்.

Next Story
Share it