Theme Check

இனி, இலவசமாக பெறலாம்.. அரசு அறிவிப்பு..!

இனி, இலவசமாக பெறலாம்.. அரசு அறிவிப்பு..!

இனி, இலவசமாக பெறலாம்.. அரசு அறிவிப்பு..!
X

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் 6-ஐ பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து, ஒப்புதல் வழங்கியதும் வண்ண வாக்காளர் அட்டையாள அட்டை வீடு தேடி விநியோகிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

அடையாள அட்டை தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ பழைய கறுப்பு வெள்ளை அட்டைக்கு மாற்றாக வண்ண வாக்காளர் அட்டை பெற பொது இ-சேவை மையங்களில் ரூ.25 கட்டணம் செலுத்தி வண்ண வாக்காளர் அட்டையை அச்சிட்டு பெறும் வசதி நடைமுறையில் இருந்தது.

ஆனால், இ-சேவை மையங்களில் பிரிண்டர் பழுது உள்ளிட்ட பல காரணங்களால் கார்டு பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் வாக்காளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதை தவிர்க்கவும், வாக்காளர் நகல் அடையாள அட்டை பெறுவதை எளிதாக்கவும் புதிய தொழில்நுட்பத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள, 'கியோஸ்க்' எனப்படும் கணிப்பொறி கருவி மாவட்ட வாரியாக வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்தில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து, தேர்தல் பிரிவு அதிகாரி ஒப்புதல் செய்த பின், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் கணினி பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பின்னர், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரப்பெறும் குறுஞ்செய்தி மற்றும் 'கியூ-ஆர்' குறியீட்டை பயன்படுத்தி வண்ண நகல் அடையாள அட்டையை இலவசமாக பெறலாம்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கலெக்டர் அலுவலகங்களில் ‘கியோஸ்க்' எனப்படும் கணிப்பொறி கருவி கடந்த ஒரு மாதமாக பயன்பாட்டில் உள்ளது.

இதன் மூலமாக, கார்டை தவற விட்டது, கார்டு சேதமானது உள்ளிட்ட காரணங்களை கூறி விண்ணப்பிப்பவர்களுக்கு புதியதாக வண்ண வாக்காளர் நகல் அட்டை வழங்கப்படுகிறது' என்றார்.

Next Story
Share it