Theme Check

இனி சத்தமின்றி வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறலாம்.. வருகிறது புதிய அப்டேட் !

இனி சத்தமின்றி வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறலாம்.. வருகிறது புதிய அப்டேட் !

இனி சத்தமின்றி வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறலாம்.. வருகிறது புதிய அப்டேட் !
X

வாட்ஸ்அப் குழுவில் இருந்து 'நோட்டிபிகேஷன்' இன்றி அமைதியாக வெளியேறும் வசதி விரைவில் வரவுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய சமூக வலைத்தளமாக வாட்ஸ்அப் மாறியுள்ளது. இதில் புகைப்படங்கள், வீடியோக்கள், டாக்குமெண்ட்கள் என அனைத்துதரப்பு தரவுகளையும் அனுப்பும் வசதி உள்ளது பெரும் பயனாக உள்ளது.

மேலும் பயன்பாட்டுக்கு மிகவும் எளிதாக இருப்பதால் தனிப்பட்ட விஷயத்திற்காக மட்டுமின்றி உலகம் முழுவதும் அலுவலக வேலை ரீதியாகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, பயனர்களின் வசதிக்காக அவர்களை கவரும் வகையில் அவ்வப்போது இதில் 'அப்டேட்'களும் வந்தவண்ணம் இருக்கின்றன.

whatsapp

இந்நிலையில், தற்போது புதிய அப்டேட் கொண்டுவரப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதாவது, வாட்ஸ்அப் குழுவில் இருந்து எந்தவித அறிவிப்புமின்றி வெளியேற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சாதாரணமாக வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறினால் குரூப் சாட்டில் 'நோட்டிபிகேஷன்' வரும். இது குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும்படி இருக்கும். ஆனால் இதனை பலரும் விரும்பமாட்டார்கள். அப்படியே வெளியே வந்தால் பின்னர் பலரும் கால்செய்து விசாரிப்பது பலருக்கும் பிடிக்காது.

whatsapp

வரவிருக்கும் புதிய வசதியில் நீங்கள் குழுவில் இருந்து வெளியேறினால் குரூப் சாட்டில் அவ்வாறு அறிவிப்பு வராது. ஆனால், அந்த குழுவின் 'அட்மின்' மட்டும் தெரிந்துகொள்ளும்படி கொண்டுவரப்பட உள்ளது. இன்னும் இது சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, உருவாக்க நிலையிலே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it