ஓ.பன்னீர்செல்வமும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில்...!
மதுரையில் இருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சிலர் ஒரே விமானத்தில் சென்னைக்கு பயணித்தனர். நேற்று இரவு 8.05 மணி மதுரையில் இருந்து இண்டிகோ விமானத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சென்னைக்கு புறப்பட்டனர்.

மதுரையில் இருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சிலர் ஒரே விமானத்தில் சென்னைக்கு பயணித்தனர்.

நேற்று இரவு 8.05 மணி மதுரையில் இருந்து இண்டிகோ விமானத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சென்னைக்கு புறப்பட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் நேற்று மதுரை சென்றிருந்தார். எனவே அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பின்னர் மு.க.ஸ்டாலினும் இரவு 8.05 மணி இண்டிகோ விமானத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தார்.
newstm.in
Tags:
Next Story

