கள்ளக்காதலுக்கு இடையூறு... கணவனின் கழுத்தை அறுத்த மனைவி!!
கள்ளக்காதலுக்கு இடையூறு... கணவனின் கழுத்தை அறுத்த மனைவி!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பேரூரணி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் கருப்பசாமி (36) - கனகலெட்சுமி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான கருப்பசாமி மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி கருப்பசாமி வீட்டுக்கு வெளியே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தட்டாபாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கனகலெட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் உறவினரான சோழபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் ரவிச்சந்திரனுடன் கனகலட்சுமி பழகி வந்துள்ளார். அதைக் கண்டித்த கருப்பசாமி மனைவியை சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி வீட்டிற்கு வந்த கருப்பசாமி வீட்டின் வெளியே தூங்குவதை கனகலட்சுமி ரவிச்சந்திரனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அன்று இரவு பேரூரணிக்கு வந்த ரவிச்சந்திரன் கருப்பசாமியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமியையும் கைது செய்தனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

