அட கொடுமையே... ஆலோசனை கூட்டத்தில் அம்மணமாக தோன்றிய எம்.பி !!
அட கொடுமையே... ஆலோசனை கூட்டத்தில் அம்மணமாக தோன்றிய எம்.பி !!

கொரோனா பரவல் காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் முடங்கின. இதனால் இன்று அலுவலக பணிகள், வகுப்புகள் மற்றும் மீட்டிங்குகள் என அனைத்தும் ஆன்லைன் வழியே நடக்கின்றன.
அதோடு மட்டுமல்லாமல் அரசு, ஆலோசனைக் கூட்டம் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் கூட ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. அந்த வகையில், வட அமெரிக்க நாடான கனடாவில் வீடியோ கான்பரன்சிங்கின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்பி ஒருவர் செய்த செயல் தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவத, கொரோனா பரவல் காரணமாக கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்.பி.,க்கள் பலரும், வீடியோ கான்பரன்சிங் வழியே பங்கேற்று வருகின்றனர். ஜூம் கால் (Zoom call) மூலம் சில கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீடிங்கில் பங்கேற்று இருந்தனர். ஜும் கால் சந்திப்பின் போது கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்பாரதவிதமாக நிர்வாணமாக ஸ்கிரீனில் தோன்றியதால் உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கனடாவின் Liberal Party கட்சியின் எம்பி வில்லியம் அமோஸ்(46) எனபவரே இவ்வாறு திரையில் தோன்றி உள்ளார். கையில் மொபைல் போனுடன், ஒரு டேபிளுக்கு பின் வில்லியம் அமோஸ் நிர்வாணமாக நின்ற ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலில் உடை ஏதும் போடாத நிலையில் நல்ல வேளையாக தனது அந்தரங்க பகுதியை அவர் கையிலிருக்கும் மொபைலை வைத்து அவர் மறைந்துள்ளார்.

தனது இந்த செயல் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள வில்லியம், இது எதிர்பாராவிதமாக நடந்து விட்டது. வாக்கிங் சென்று விட்டு நான் போட்டிருந்த உடைகளை மாற்றிய போது இந்த சம்பவம் நடந்து விட்டது. நான் மிகவும் துரதிர்ஷ்டவசமான தவறைச் செய்து விட்டேன், வெளிப்படையாக வெட்கப்படுகிறேன். சபையில் உள்ள எனது சக ஊழியர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் அரசு மீட்டிங்கில் அவர் நிர்வாணமாக தோன்றியது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in

