அட கடவுளே ! ஒரே நேரத்தில் அக்கா, தங்கைக்கு தாலி கட்டிய புதுமாப்பிள்ளை அதிரடி கைது !!
அட கடவுளே ! ஒரே நேரத்தில் அக்கா, தங்கைக்கு தாலி கட்டிய புதுமாப்பிள்ளை அதிரடி கைது !!

கொரோனா காலம் என்பதால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமானோர் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இங்கு ஒரு திருமணத்தில் புதுமாப்பிள்ளையே கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேகமகடு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (30). இவர் சில தினங்களுக்கு முன்பு தனது சகோதரியின் மகள்களான 19 மற்றும் 16 வயதான பெண் மற்றும் சிறுமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டார். இதில் உறவினர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து, கோலார் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் 19 வயதான பெண்ணுக்கு பேசும் திறன் குறைபாடு உள்ளதால் அவரை யாரும் திருமணம் செய்ய முன்வரவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அவரது தயார் தனது சகோதரான உமாபதியிடம் பேசி இரு மகள்களையும் திருமணம் செய்து வைத்துள்ளார். குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதால் இந்த திருமணம் நடந்துள்ளது.
ஆனால், இளைய மகளுக்கு 18 வயது நிறைவடையாததால், குழந்தை திருமணம் செய்ததாக கூறி உமாபதி, மணமக்களின் பெற்றோர் மீது முல்பாகல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புதுமாப்பிள்ளை உமாபதியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரே நேரத்தில் இருவருக்கு தாலி கட்டிய இளைஞர் தற்போது கம்பி எண்ணி வருகிறார்.
newstm.in

