தந்தைக்காக ஓகே.. விரைவில் நயன்தாராவுக்கு திருமணம் !!

தந்தைக்காக ஓகே.. விரைவில் நயன்தாராவுக்கு திருமணம் !!

தந்தைக்காக ஓகே.. விரைவில் நயன்தாராவுக்கு திருமணம் !!
X

வயது கூடிக்கொண்டே சென்றாலும் இளமையும் அழகும் குறையாதவர் நடிகை நயன்தாரா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாராவை பற்றி வாரந்தோறும் கிசு கிசு வந்துவிடும்.

முதன்முதலாக நடிகை நயன்தாரா சிம்புவை காதலித்தார். இருவரும் திருமணம் வரை நெருங்கினார்கள். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக, நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டார்.

பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். இருப்பினும் இந்த காதலும் தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து நயன்தாராவுக்குள் மூன்றாவது காதல் துளிர்த்தது. டைரக்டர் விக்னேஷ் சிவன் மூன்றாவது காதலர் ஆனார். இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள். திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில், கணவன் -மனைவி போல் வாழ்ந்து வருகிறார்கள்.

இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரண்டு பேரின் பெற்றோர்களும் ஆசைப்படுகிறார்கள். குறிப்பாக நயன்தாராவின் தந்தை குரியன் மகளின் திருமணத்தை பார்க்க மிகவும் ஆசைப்படுகிறார். அவர் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் சமீபத்தில் இவர்கள் கொச்சிக்கு சென்ற போது, இவர்களது திருமணம் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் தந்தை கட்டாயப்படுத்தியதாகவும் இதனால் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நயன்தாராவும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கிசு கிசுகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து விக்னேஷ் சிவனை கரம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in


Tags:
Next Story
Share it