மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞரை அடித்தே கொலை செய்த கிராம மக்கள் !
மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞரை அடித்தே கொலை செய்த கிராம மக்கள் !

நாடு முழுவதும் மக்கள் கொரோனா பீதியில் இருக்கும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சூழலுக்கும் மத்தியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்தப்பாடு இல்லை. அதனொன்றாக, 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கிராம மக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அப்பிகானிபள்ளி கிராமத்தில் 60 வயது மூதாட்டி ஒருவர் தனியே வசித்து வந்தார். ஊரடங்கால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கியுள்ளார். மேலும் அவரிடம் இருந்த 4 சவரன் நகைகளை பறித்துள்ளார். அத்துடன் அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சில நிமிடம் மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்த நிலையில், பின்னர் எழுந்து மூதாட்டி சத்தம்போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தனக்கு நடந்த கொடூரத்தையும் இதற்கு மூர்த்தி என்பவர் தான் காரணம் எனவும் கிராம மக்களிடம் மூதாட்டி கூறியுள்ளளார்.

இதனை அறிந்து ஆவேசமடைந்த கிராம மக்கள் தனது வீட்டில் பதுங்கியிருந்த மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

