Theme Check

ஒலிம்பிக் தடகளம்.. மகளிர் 100 மீட்டர் பிரிவில் இந்தியாவின் டூட்டி சந்த் அதிர்ச்சி தோல்வி !!

ஒலிம்பிக் தடகளம்.. மகளிர் 100 மீட்டர் பிரிவில் இந்தியாவின் டூட்டி சந்த் அதிர்ச்சி தோல்வி !!

ஒலிம்பிக் தடகளம்.. மகளிர் 100 மீட்டர் பிரிவில் இந்தியாவின் டூட்டி சந்த் அதிர்ச்சி தோல்வி !!
X

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் டூட்டி சந்த் தோல்வியை தழுவினார்.

டோக்கியோ ஒலிம்பிக் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்குரிய போட்டிகளில் ஒன்றான தடகளம் இன்று தொடங்கி இருக்கிறது. தடகளத்தில் இந்திய வீரர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் உள்ளது.

dutee chand

தடகளத்தில் பல்வேறு பிரிவு ஓட்டப்பந்தயம், நடைபந்தயம், மாரத்தான், வட்டு எறிதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டிரிப் ஜம்ப், கம்பூன்றி தாண்டுதல், டெகத்லான், ஹெப்டத்லான் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் 48 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

இதில் இந்தமுறை திறமை வாய்ந்த வீரர்களையே டோக்கியோவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இதில் தமிழக வீரர், வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

dutee chand

இந்த நிலையில் இன்று மகளிர் 100 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் டூட்டி சந்த் கலந்துக்கொண்டு தடகளத்தை தொடங்கினார். இதில் டூட்டி சந்த் 7 ஆவது இடத்தை மட்டுமே பிடித்தார். இதனால் 100 மீட்டர் பிரிவில் இந்தியா தோல்வியடைந்தது.

newstm.in

Tags:
Next Story
Share it