Theme Check

ஒலிம்பிக் ஹாக்கி: ஆண்கள் அணிக்கு 'டப்' கொடுக்கும் இந்திய மகளிர் அணி ! அரையிறுதிக்கு முன்னேற்றம் !!

ஒலிம்பிக் ஹாக்கி: ஆண்கள் அணிக்கு 'டப்' கொடுக்கும் இந்திய மகளிர் அணி ! அரையிறுதிக்கு முன்னேற்றம் !!

ஒலிம்பிக் ஹாக்கி: ஆண்கள் அணிக்கு டப் கொடுக்கும் இந்திய மகளிர் அணி ! அரையிறுதிக்கு முன்னேற்றம் !!
X

பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டம்ங்கள் இன்று நடைபெற்றன. இதில் 2ஆவது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் கால் பகுதி (15 நிமிடம்) இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

woman hockey

ஆனால் 2ஆவது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமாக விளையாடினார்கள். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோல் வளைக்குள் அனுப்ப முயற்சித்தனர். எனினும் பலனிக்காத நிலையில் ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கார்னர் வாய்ப்பு கிட்டியது. அந்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

3-வது மற்றும் 4-வது கால் பகுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். பல வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்தபோதும் அதனை ஆஸ்திரேலிய வீராங்கனைகளால் கோலாக மாற்ற முடியவில்லை.

woman hockey

இதனால் கடைசி இரண்டு கால் பகுதி ஆட்டங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆகவே இந்தியா 1-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஏற்கனவே 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் அணி நேற்று அரையுறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அதேபோல் இந்திய மகளிர் ஹாக்கி அணியும் அரையுறுதிக்கு முன்னேறியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it