Theme Check

ஒலிம்பிக் ஹாக்கி: கடைசி லீக்கில் இந்திய மகளிர் அணி த்ரீல் வெற்றி !!

ஒலிம்பிக் ஹாக்கி: கடைசி லீக்கில் இந்திய மகளிர் அணி த்ரீல் வெற்றி !!

ஒலிம்பிக் ஹாக்கி: கடைசி லீக்கில் இந்திய மகளிர் அணி த்ரீல் வெற்றி !!
X

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பளுதூக்குதலில் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. இதுவரை இந்த ஒரு பதக்கத்தை வென்றாலும் கிட்டதட்ட 3 பதக்கங்கள் இந்தியாவுக்கு அடுத்து உறுதியாக உள்ளது. அதில் ஒன்று ஹாக்கி. ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் ஆண்கள், பெண்கள் அணியினர் கலக்கி வருகின்றனர்.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி இடம்பெற்ற ‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, பிரட்டன், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில், நெதர்லாந்துக்கு எதிராக 1ஆ5, ஜெர்மனிக்கு எதிராக 0- 2, பிரிட்டனுக்கு எதிராக 1- 4 என வரிசையாக படுதோல்வியடைந்தது. ஆனால் 4ஆவது லீக்கில் அயர்லாந்தை 1- 0 என வீழ்த்தி காலிறுதி வாய்ப்புக்கான வாய்ப்பை தக்கவைத்திருந்தது.

india woman hockey

இந்த நிலையில் இன்று வாழ்வா சாவா கட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 4ஆவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா முதல் கோல் அடித்தார். முதல் கால் பகுதியின் ஆட்ட முடிவின் கடைசி நிமிடத்தில் தென்ஆப்பிரிக்கா பதில் கோல் அடித்தது. இதனால் முதல் கால் பகுதியில் 1ஆ1 என இரு அணிகளும் சமநிலை பெற்றன.

2ஆவது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீராங்கனை கட்டாரியா 17ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். ஆட்டம் முடியும் நேரத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஹன்டர் கோல் அடித்தார். இதனால் 2ஆவது கால் பகுதி ஆட்டம் முடிவில் 2- 2 என சமநிலை பெற்றன.

india woman hockey

3ஆவது காலிறுதி நேரத்தில் இந்தியா 32ஆவது நிமிடத்திலும் (நேஹா), தென்ஆப்பிரிக்கா 39ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தன. 4ஆவது கால்பகுதி ஆட்டத்தில் இந்தியாவின் கட்டாரியா 49ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க, தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளால் அதற்கு பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய பெண்கள் அணி 4- 3 என வெற்றி பெற்றது.

newstm.in

Tags:
Next Story
Share it