அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு பரவிய ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு.. பீதியில் மக்கள்
அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு பரவிய ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு.. பீதியில் மக்கள்

கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, தற்போது உலக நாடுகளில் எல்லாம் கால் தடம் பதிக்கத்தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் மற்ற கொரோனா வைரஸ்களை விட 50 உருமாற்றங்களை தன்னிடம் கொண்டிருப்பதால் மோசமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி பெரியளவில் வேலை செய்யாது என கூறப்பட்டுள்ளதால் பல நாடுகள் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த நிலையில், இந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்டட 20 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாகி இருப்பதாக அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆண்டனி பாசி கூறும்போது, இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து வித்தியாசமான உருமாற்றங்களை கொண்டுள்ளது. இருப்பினும் இது மிகவும் பரவக்கூடியதா என்பதை தீர்மானிப்பது கடினமாக உள்ளது என தெரிவித்தார்.
இந்தநிலையில், உலகை அச்சுறுத்தி வருகிற ஒமைக்ரான் வைரஸ், அமெரிக்காவிலும் நுழைந்து விட்டது. ஆப்பிரிக்க நாடு ஒன்றில் இருந்து கலிபோர்னியா திரும்பி வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபரும், அவரது நெருங்கிய தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவில் இந்த வைரஸ் நுழைந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் ஆவார். அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதித்து முதல் வழக்கு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளளது. அதில், கோவிட் ஜாப்ஸ் மற்றும் பூஸ்டர்களைப் போட்டுக்கொள்ள வேண்டும் என மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in