Theme Check

ஒமைக்ரான் எதிரொலி.. புதுவையில் வரும் ஜனவரி 31 வரை இரவு ஊரடங்கு..!

ஒமைக்ரான் எதிரொலி.. புதுவையில் வரும் ஜனவரி 31 வரை இரவு ஊரடங்கு..!

ஒமைக்ரான் எதிரொலி.. புதுவையில் வரும் ஜனவரி 31 வரை இரவு ஊரடங்கு..!
X

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிய போதிலும், இது குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன. ஆனாலும், உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்றத் தொடங்கியுள்ளன.

இந்தியாவில், கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நில்நியில், ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய உள்விவகார அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அந்த வகையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் மற்றும் ஒமைக்ரானை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை, வைகுண்ட ஏகாதசி தவிர்த்து இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story
Share it