Theme Check

ஒமைக்ரான் தீவிரம்.. நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை: மத்திய அரசு!

ஒமைக்ரான் தீவிரம்.. நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை: மத்திய அரசு!

ஒமைக்ரான் தீவிரம்.. நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை: மத்திய அரசு!
X

நகரப்பகுதிகளில் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அதோடு கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா தொற்றின் பாதிப்பும் மிகவேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பு பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

omicron-Covid-variant

மக்கள் அடத்தியான இடத்தில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாட்டில் நகரப்பகுதிகளில் ஒமைக்ரான் வகை கொரோனா அதிகமாக பரவி வருவதாக புதிய தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலவும் கொரோனா பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் ஐசிஎம்ஆர் அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

omicron-Covid-variant

டெல்லியில் நேற்று அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாட்டில் ஒமைக்ரான் வகை கொரொனா அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நகர்ப்பகுதிகளில் வேகமெடுத்துள்ளது. கடந்த 8 நாட்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு 6.3 மடங்கு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் தொற்று பரவல் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


newstm.in

Tags:
Next Story
Share it