இந்தியாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான்.. 422 ஆக உயர்வு ! மகாராஷ்டிரா முதலிடம் !
இந்தியாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான்.. 422 ஆக உயர்வு ! மகாராஷ்டிரா முதலிடம் !

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 422ஆக உயர்ந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
உருமாறிய கொரோனா தொற்றாக கருதப்படும் ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 108 பேரும், புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்கு ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கேரளாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் இன்று(டிச.26) காலை 9 மணி நேர நிலவரப்படி நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. தற்போது 422 பேருக்கு ஒமைக்ரான் பரவியுள்ள நிலையில், இதுவரை 130 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

