ஒமைக்ரான் 3ஆவது அலையை ஏற்படுத்துவது உறுதி! நிபுணர் குழு எச்சரிக்கை!!
ஒமைக்ரான் 3ஆவது அலையை ஏற்படுத்துவது உறுதி! நிபுணர் குழு எச்சரிக்கை!!

நாட்டில் வருகிற பிப்ரவரியில் ஒமைக்ரான் பாதிப்புகளால் 3ஆவது அலை ஏற்படும் என கொரோனா நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கு டெல்டா வகை கொரோனா காரணம் என கூறப்பட்டது. இதனால் 2ஆவது அலை நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.
அதன்பின்னர் டெல்டா பிளஸ் உள்ளிட்ட கொரோனா வகைகள் கண்டறியப்பட்டாலும் பெரும் தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை. சமீப நாட்களாக நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா 3ஆவது அலை சாத்தியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பேசிய கொரோனா சூப்பர்மாடல் குழுவின் தலைவர் வித்யாசாகர், இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 3ஆவது அலை ஏற்பட கூடும் என கணித்துள்ளார்.
தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் மக்களிடம் உள்ளது. அதனால், 2வது அலையை விட இந்த அலை லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் 3ஆவது அலை நிச்சயம் ஏற்படும் என்றும் அப்போது தினசரி பாதிப்பும் உறுதியாக உயரும் என அவர் கூறியுள்ளார்.
newstm.in

