Theme Check

கைமீறுகிறதா ஒமைக்ரான்..?: தலைநகரில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி..!

கைமீறுகிறதா ஒமைக்ரான்..?: தலைநகரில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி..!

கைமீறுகிறதா ஒமைக்ரான்..?: தலைநகரில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி..!
X

டில்லியில் முதன்முறையாக கடந்த 2ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த நபர், தான்சானியாவில் இருந்து தோஹா வழியாக டில்லி வந்தவருக்கு ஒமைக்ரான் உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தொற்று அதிகரித்து, பாதிப்பு 10 ஆக இருந்தது.

ஓரிரு நாட்களுக்கு முன்னர், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நிருபர்களிடம் கூறும்போது, டில்லியில் ஒமைக்ரான் பரவல் சமூக பரவலாக மாறவில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது என தெரிவித்தார். பின்னர் அவர், டில்லி விமான நிலையம் வரும் பலருக்கு கோவிட் உறுதி செய்யப்படுகிறது என தெரிவித்திருந்தார்.
Delhi power crisis: Coal stocks have reduced to critical level, say  officials
இந்நிலையில், அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “டில்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு 20 ஆக அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 40 பேர் ஒமைக்ரான் சந்தேகம் காரணமாக, லோக் நாயக் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it