Theme Check

இந்தியாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான்.. பாதிப்பு 400-ஐ தாண்டியது !!

இந்தியாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான்.. பாதிப்பு 400-ஐ தாண்டியது !!

இந்தியாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான்.. பாதிப்பு 400-ஐ தாண்டியது !!
X

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் விமான சேவைகளை கட்டுப்படுத்தி தீவிர நடவடிக்கை எடுத்தப்போதும் ஒமைக்ரான் பரவிவிட்டது. இந்த நிலையில், தொற்று பரவல் சூழலுக்கேற்ப ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

corona

இந்நிலையில் நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 108 பேரும், டெல்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும் தெலங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கேரளத்தில் 37 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகத்தில் 31 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியாணா, ஒடிசா, ஆந்திரத்தில் தலா 4 பேரும், ஜம்மு-காஷ்மீர், மேற்குவங்கத்தில் தலா 3 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 2 பேரும், சண்டீகர், லடாக், உத்தரகண்டில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

இதுவரை 115 பேர் ஒமைக்ரான் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் மூன்று பேர் ஒமைக்ரானில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it