Theme Check

ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. இனி தடுப்பூசி வேண்டாம்.. மாத்திரை போதும்.. பிரபல நிறுவனம் அறிவிப்பு

ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. இனி தடுப்பூசி வேண்டாம்.. மாத்திரை போதும்.. பிரபல நிறுவனம் அறிவிப்பு

ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. இனி தடுப்பூசி வேண்டாம்.. மாத்திரை போதும்.. பிரபல நிறுவனம் அறிவிப்பு
X

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்தநிலையில் உருமாறிய புதிய கொரோனா வைரசான ஒமைக்ரானை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிக்கு பதில் பைசர் மாத்திரைகள் நல்ல பலன் அளிப்பதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் பைசர் நிறுவனம் கொரோனா வைரஸ்க்காக, பாக்ஸ்லோவிட் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது.கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மூன்று நாட்களில் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம் 89 சதவீதம் குறைந்து விடும். 5 நாட்களுக்குள் இந்த மாத்திரை வழங்கப்பட்டால் ஆபத்து 88 சதவீதமாக குறைந்துவிடும் என என பைசர் நிறுவன சி.இ.ஓ., ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

uk england

இதற்கிடையே மரபணு மாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதை தடுப்பூசி செலுத்துவதால் கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் நிலவிவருகிறது.

இது தொடர்பாக கூறிய பைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா, பாக்ஸ்லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஒமைக்ரான் உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறேன், என்று அவர் கூறினார்.

pfizer tablate

இதனிடையே, ஐரோப்பிய நாடுகளும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த பைசர் மாத்திரை மீது தனது கவனத்தை திருப்பி உள்ளது. அவசரகால பயன் பாட்டுக்காக முன்கூட்டியே பைசர் மாத்திரையை பயன்படுத்தலாம் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் விரைவில் புதிய வகை மாத்திரையான பைசர் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it