ஒமைக்ரான் கொரோனாவால் இனி உயிர்ப்பலி அதிகரிக்கும்.. WHO எச்சரிக்கை !

ஒமைக்ரான் கொரோனாவால் இனி உயிர்ப்பலி அதிகரிக்கும்.. WHO எச்சரிக்கை !

ஒமைக்ரான் கொரோனாவால் இனி உயிர்ப்பலி அதிகரிக்கும்.. WHO எச்சரிக்கை !
X

உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

omicron-Covid-variant

உலகளவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ஒமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஒமைக்ரான் பரவல் நிலைகள் குறித்து அவ்வபோது தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இதனிடையே, ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு உலகின் முதல் பலி, இங்கிலாந்தில் நேற்று முன்தினம் பதிவாகி இருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா வைரசால் மருத்துவமனைகள் சேர்க்கப்படும் தொற்று பாதித்தவர்களும், இறப்புகளும் அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
omicron-Covid-variant
இதை உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.இனி வரும் வாரங்களில் ஒமைக்ரான் வைரசின் தீவிரத்தன்மை பற்றிய கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் நிபுணர்கள் கூறி உள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it