இந்தியாவில் 800-ஐ நெருங்கும் ஒமைக்ரான் பாதிப்பு..மத்திய அரசு அதிர்ச்சி தகவல் !!
இந்தியாவில் 800-ஐ நெருங்கும் ஒமைக்ரான் பாதிப்பு..மத்திய அரசு அதிர்ச்சி தகவல் !!

நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரைன் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளன. மேலும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. எனினும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் குறித்த தரவுகளின் பட்டியலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், அதிகபட்சமாக டெல்லியில் 238 பேருக்கும் மகாராஷ்டிரத்தில் 167 பேருக்கும், குஜராத்தில் 73 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணிப்பூர், லடாக், ஹிமாச்சல், கோவா மாநிலங்களில் தலா ஒருவரும், ஜம்மு-காஷ்மீர், சண்டிகரில் தலா 3 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களில் 241 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 540 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
newstm.in

